சட்டம்- ஒழுங்கை சீரழிக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசை கண்டித்து மன்னார்குடியில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு
சென்னை, நவ. 14-
திருவாரூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழித்துக்கொண்டிர ;ுக்கிற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து மன்னார்குடியில் நாளை (15-ம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள் ;.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு:-
கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது. பின்னர் ஆளும் தி.மு.க-வினர் இதில் தலையிட்டவுடன், அவர்கள் உத்தரவின் பேரில் அந்த வழக்குகளை காவல்துறை வாபஸ் பெறுகிறது.
அதாவது, ஆளும் தி.மு.க.-வினரின் கட்டப்பஞ்சாயத்திற் ;கு காவல் துறை துணை போகிறது. இது போன்ற பணிகளில் தான் காவல் துறையினர் நாட்டம் செலுத்துகின்றனரே தவிர, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை ; பட்டியலிடலாம்.
மன்னார்குடி நகரம், கோபிரளயம் சாலையில் காளியம்மாள் என்ற பெண்மணி 9.6.2010 அன்று கொலை செய்யப்பட்டது;
திருத்துறைப்பூண்டி ; காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாமணி பகுதியில் 1.8.2010 அன்று 5 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டது;
நீடாமங்கலம், கோவில்வெண்ணி அம்பேத்கர் நகரில் கோவிந்தமாள் என்கிற மூதாட்டி கொலை செய்யப்பட்டது உள்பட பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத ; சூழ்நிலை நிலவுகிறது.
இதே போன்று, மன்னார்குடி நகரத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 25.6.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, துணிக்கடை அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை, திருவாரூர் நகரத்தில் வேளாண்துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் வீட்டில் 15.5.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, 20.7.2010 அன்று நூருல்அமீன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 19.2.2010 அன்று ரவிச்சந்திரன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 7.8.2010 அன்று நன்னிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் ஜெயந்தி என்பவருடைய செயின் அறுப்பு, மூங்கில்குடி முத்து அனிதாவின் செயின் அறுப்பு. என பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவி ;ல்லை. மாறாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுவது, தி.மு.க-வினருக்கு எதிராக கழக நிர்வாகிகள் புகார்கொடுத்தால் அதை பதிவு செய்யாமல், தி.மு.க.-வினரை அழைத்து கழக நிர்வாகிகள் மீது புகார் கொடுக்கச் சொல்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் திருவாரூர் மாவட்டக் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும், காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு கள்ள சாராயம் கடத்துவதற்கு உறுதுணையாக காவல் துறை இருப்பதாகவும், திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தி.மு.க. மாவட்டச் செயலாளரைப் போல் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே, ஆளும் தி.மு.க-வினரின் ஏவல் துறையாக மாறி, சட்டம்&-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திருவாரூர் மாவட்டக் காவல் துறையையும், மைனாரிட்டி தி.மு.க. அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 15.11.2010 திங்கட் கிழமை அன்று காலை 10 மணி அளவில், மன்னார்குடி நகரம், மேல ராஜ வீதி, பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட் ட ம் , கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. பி.எச். மனோஜ்பாண்டியன்,எம்& #46;பி., அவர்கள் தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.இரா.காமராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுச்செயலாளர் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
நாள்: 13.11.2010
சென்னை-14.
No comments:
Post a Comment