Wednesday, November 3, 2010

காவிரி நீரைப் பெறுவதற்கு முதல்வருக்கு துணிச்சல் இருக்கிறதா?புரட்சிதலைவி அம்மா கேள்வி

சென்னை : "காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு, மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ முதல்வர் கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர் கருணாநிதி தன் அறிக்கையில், காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன்.கடந்த 30ம் தேதி அறிக்கையில், "1998ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சி மத்தியில் நடைபெற்று வந்த போது, காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயத்தில், காவிரி நதிநீர் ஆணையம் அரசு அதிகாரிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்."காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசு மறுக்கும் சமயத்தில், அங்குள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி நதிநீர் ஆணையம் எடுத்துக் கொள்ளும் வகையிலான அதிகாரத்தை அந்த ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்' என்று, தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்திற்கோ வழங்க வேண்டும் என, வலியுறுத்தினேன்.

தற்போதுள்ள பல் இல்லாத ஆணையத்தை அதிகாரமுள்ள ஆணையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இந்த பொருள். கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார்.காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா? முல்லைப் பெரியாறு விஷயத்திலேயே கருணாநிதியின் முகமூடி கலைந்து விட்டதே. இவர் எங்கிருந்து காவிரி பிரச்னையில் குரல் கொடுக்கப் போகிறார்?கடந்த 31ம் தேதி, தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாக் கூட்டத்தில், "தண்ணீர் விடமாட்டேன் என்று சொன்ன கர்நாடகம் கூட, விட்டுத்தான் தீர வேண்டும் என்ற அளவுக்கு மழை பொழிந்துள்ளது' என்று, மகிழ்ச்சி பொங்க கருணாநிதி பேசி இருக்கிறார்.

அவரது இது போன்ற பேச்சு ஏதோ தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் வந்த மிகப் பெரிய ஆபத்து நீங்கியுள்ளது போல் அமைந்துள்ளது.கருணாநிதி கர்நாடகத்திற்கு முதல்வரா அல்லது தமிழகத்திற்கு முதல்வரா? கர்நாடக முதல்வர் இவ்வாறு பேசியிருந்தால் இதில் அர்த்தம் இருக்கிறது. தமிழக முதல்வர் இவ்வாறு பேசுவதைப் பார்த்தால் எதற்கோ அஞ்சுகிறார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.கடைசியாக தனது அறிக்கையில், "அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவை வளர்த்துக் கொண்டு, நமக்குத் தேவையான தண்ணீரைப் பெற வேண்டிய அணுகுமுறையை அரசு கடைபிடித்து வருகிறது' என, கூறியிருக்கிறார் கருணாநிதி. அவரது நடவடிக்கை மூலம், தமிழகம் வளம் பெறவில்லை. இனிமேல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு  புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment