Wednesday, October 27, 2010

வடசென்னை மாவட்ட செயலர் மாற்றம்

சென்னை:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலர் பதவியிலிருந்துP.K. சேகர்பாபு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்D. ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா  வெளியிட்டுள்ள அறிவிப்பு:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து P.K.சேகர்பாபு விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநிலச் செயலர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவிகளிலிருந்துD. ஜெயகுமார் விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட புதிய செயலராகD. ஜெயகுமார் நியமிக்கப்படுகிறார்.திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக இலக்கிய அணி மாநில செயலர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலர் பொறுப்பிற்குP.K. சேகர்பாபு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மாஉத்தரவிட்டுள்ளார்.



கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், வடசென்னை மாவட்டத்தில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன.   வடசென்னையை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாவட்டத்தில் அடங்கிய எட்டு சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு புரட்சிதலைவி அம்மா நேற்று முன்தினம் அவசர அழைப்பு விடுத்தார். அவைத்தலைவர் மதுசூதனன், பேரவை மாநில செயலர் நயினார் நாகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் ஜெயகுமார்,மாவட்டபேரவை தலைவர் கு.சீனிவாசன்,வெற்றிவேல், நீலகண்டன் உள்ளிட்ட சிலரை மட்டும்புரட்சிதலைவி அம்மா அழைத்து பேசினார்.வடசென்னையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, சட்டசபை தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டும் என புரட்சிதலைவி அம்மா உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, ஆர்.கே.நகர்P.K. சேகர்பாபு, ராயபுரம் D.ஜெயகுமார், திரு.வி.க., நகர்வ. நீலகண்டன், துறைமுகம் கு.சீனிவாசன், பெரம்பூர், வில்லிவாக்கம் P.வெற்றிவேல், மீதமுள்ள எழும்பூர், கொளத்தூர் தொகுதிகளை பக்கத்து தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Saturday, October 16, 2010

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிசபதம்

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிஅம்மாசபதம்

October 15, 2010

1973ம் ஆண்டு மே மாதத்தில் அதிமுக தனது முதல் வெற்றியைக் குவித்தது. அதே மாதத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39ல் அடியெடுத்து வைக்கிறது.
சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்.
‘ஒரு கூத்தாடியும் அவர் பின்னால் சில நூறு விசிலடிச்சாங் குஞ்சுகளும்’ என்று எள்ளி நகையாடியதை, கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக தன் முதல் வெற்றியை பெற்றது.
எஃகுக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த எம்.ஜி.ஆர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.
இவ்வேளையில், 1984ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. அப்போது, மக்களிடம் ‘எம்.ஜி.ஆர். ஐஸ் பெட்டியில் இருக்கிறார்’ என்று வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டார் கருணாநிதி . இது மட்டுமல்லாமல், ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள், நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்’ என்றார் கருணாநிதி.
இப்படி, எம்.ஜி.ஆர். அவர்கள் களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக் காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் சகோதரியாகிய நான் பெற்றேன்.
புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அதிமுக அமோக வெற்றியை ஈட்டியது.
பின்னர், 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்தை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி, கழகத்திற்கு துரோகம் செய்வதற்குக் காத்திருந்த துரோகிகள் சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கழகத்தை பிளவுபடுத்தினார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பூட்டினார். கழகத்தின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிடச் செய்தார். சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும் என்பது போல், பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989ல் ஆட்சிக்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து 1991 தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் கருணாநிதியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய், புரட்டுகளால் 1996ல் அதிமுக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.
ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை குவிக்கச் செய்தேன்.
அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கருணாநிதியை வீழ்த்தி, அதிமுக மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.
இருப்பினும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுக்குப் பணம் என்னும் இழிவான யுக்தியை அறிமுகம் செய்து 2006ல், ஒட்டு போட்ட சட்டை போல் பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.
இந்த நான்கரை ஆண்டு காலத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக மக்களை கருணாநிதி ஆளாக்கிவிட்டார்.
இப்படி, எல்லா மட்டங்களிலும் தமிழகத்தை இருள் சூழ வைத்துவிட்ட கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அதிமுகதான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.
பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக, தனது முதல் கன்னி வெற்றியை 1973 ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011 ல் அமையப் போகும் புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருணாநிதியை வீழ்த்தி, எம்.ஜி.ஆரின். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் அனைவரும் சபதமேற்போம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்

அம்மாவுக்கு கொலை மிரட்டல் விசாரணை : உத்தரவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு

அம்மாவுக்கு கொலை மிரட்டல் விசாரணை : உத்தரவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு அச்சடித்து எடுக்க
 

Favoured :
Imageஅம்மாவுக்கு கொலை மிரட்டல் விசாரணை: மத்திய அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு - அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான செல்வி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து அதிமுக தரப்பிலிருந்து காவல்துறைக்கு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ஏழு கடிதங்களின் அடிப்படையில், சென்னை நகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத்தலைமை இயக்குநர் ஆகியோரிடம், ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரங்கநாதன் மற்றும் கே.பி.சுனில் ஆகியோர் 28.8.2010, 03.09.2010, 17.09.2010 (இரண்டு கடிதங்கள்) மற்றும் 24.09.2010 (மூன்று கடிதங்கள், இரண்டு புகார்கள்) ஆகிய தேதிகளில் கொடுத்த புகார்களின் பேரில், சென்னை மாநகர் கிண்டி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 506 (ii) ஆகியவற்றின் கீழ் குற்ற எண்கள் 692/2010, 709/2010, 796/2010, 823/2010 மற்றும் 824/2010-ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,   இக்கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புலன் விசாரணை - உயரதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வந்தபோதிலும், 27-09-2010 அன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலாளரையும், உள்துறை முதன்மைச் செயலாளரையும் சந்தித்து, மேலும் கொலை மிரட்டல் விடுத்து மூன்று கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுவரை கொடுத்த புகார்களின் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஒரு மனு அளித்தனர். அவர்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்குகள் அனைத்தையும் மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு 29.09.2010 அன்று தமிழக அரசு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து, மேலும் வந்த மிரட்டல் கடிதங்களையும், சி.பி.ஐ.-ன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு மத்திய அரசுக்கு 14.10.2010 அன்று தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இன்று (15.10.2010) தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் பணியாளர் துறைச் செயலாளருக்கு இது சம்பந்தமாக விரைவில் ஆணை பிறப்பிக்கக் கோரி ஒரு நேர்முகக் கடிதமும் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு உயரிய பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு, அவருக்கு வரப்பெற்ற மிரட்டல் கடிதங்களையும் உரிய விசாரணைக்காக சி.பி.ஐ.-க்கு மாற்ற மத்திய அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Nakkheeran

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us



அம்மாவுக்கு மிரட்டல; சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்:


அம்மாவுக்கு மிரட்டல; சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்: தமிழக அரசு விளக்கம்


சென்னை, அக். 15: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து ஜெயா டி.வி.க்கு 7 கடிதங்கள் வந்தன. இதுதொடர்பாக, ஜெயா டி.வி.யின் துணைத் தலைவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்தக் கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளரை செப்டம்பர் 27-ம் தேதி சந்தித்தனர்.  ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மேலும் கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  அதை ஏற்று, இந்த வழக்குகள் அனைத்தையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி கடிதம் எழுதியது.  அதனைத் தொடர்ந்து வந்த மிரட்டல் கடிதங்களையும் சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக, விரைவாக ஆணை பிறப்பிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேர்முகக் கடிதமும் எழுதியுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அவருக்கு வரப்பெற்ற மிரட்டல் கடிதங்கள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மத்திய அரசின் ஆணை எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.