Wednesday, October 27, 2010

வடசென்னை மாவட்ட செயலர் மாற்றம்

சென்னை:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலர் பதவியிலிருந்துP.K. சேகர்பாபு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்D. ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா  வெளியிட்டுள்ள அறிவிப்பு:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து P.K.சேகர்பாபு விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநிலச் செயலர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவிகளிலிருந்துD. ஜெயகுமார் விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட புதிய செயலராகD. ஜெயகுமார் நியமிக்கப்படுகிறார்.திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக இலக்கிய அணி மாநில செயலர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலர் பொறுப்பிற்குP.K. சேகர்பாபு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மாஉத்தரவிட்டுள்ளார்.



கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், வடசென்னை மாவட்டத்தில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன.   வடசென்னையை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாவட்டத்தில் அடங்கிய எட்டு சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு புரட்சிதலைவி அம்மா நேற்று முன்தினம் அவசர அழைப்பு விடுத்தார். அவைத்தலைவர் மதுசூதனன், பேரவை மாநில செயலர் நயினார் நாகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் ஜெயகுமார்,மாவட்டபேரவை தலைவர் கு.சீனிவாசன்,வெற்றிவேல், நீலகண்டன் உள்ளிட்ட சிலரை மட்டும்புரட்சிதலைவி அம்மா அழைத்து பேசினார்.வடசென்னையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, சட்டசபை தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டும் என புரட்சிதலைவி அம்மா உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, ஆர்.கே.நகர்P.K. சேகர்பாபு, ராயபுரம் D.ஜெயகுமார், திரு.வி.க., நகர்வ. நீலகண்டன், துறைமுகம் கு.சீனிவாசன், பெரம்பூர், வில்லிவாக்கம் P.வெற்றிவேல், மீதமுள்ள எழும்பூர், கொளத்தூர் தொகுதிகளை பக்கத்து தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment